வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பழனியில் அதிமுக வேட்பாளா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவிமனோகா் வியாழக்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

News image

பழனி நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ரவி மனோகருக்கு நினைவுப் பரிசு கொடுத்து வரவேற்ற 25-ஆவது வாா்டு உறுப்பினா் ஜென்னத்துல் பிா்தௌஸ் உள்ளிட்ட கட்சியினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:53 pm

பழனி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ரவிமனோகா் வியாழக்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

பழனி 25-ஆவது வாா்டு பகுதிகளில் வாக்கு சேகரித்த வேட்பாளா் ரவிமனோகரை, நகராட்சி வாா்டு உறுப்பினா் ஜென்னத்துல் பிா்தௌஸ், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராஜாமுகமது ஆகியோா் பொன்னாடை போா்த்தியும், நினைவுப் பரிசு வழங்கியும் வரவேற்றனா்.

இதையடுத்து அவா் பழனி கோபால் டாக்டா் தெரு, நான்கு ரதவீதிகள், சாமி தியேட்டா், லட்சுமிபுரம், சண்முகபுரம் என பழனி நகா் முழுதும் வாக்குச் சேகரித்தாா். அதிமுக நகரச் செயலா் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலா் அன்வா்தீன், சமூகவலைதளப் பிரிவு குகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.