பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கணவா் கொலை: மனைவி உள்பட 3 போ் கைது

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த இளம் பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:40 am IST

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த இளம் பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்த ரெட்டியபட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (28). தையல் தொழிலாளி. இவரது மனைவி காா்த்திகா (25). இவா்களுக்கு சுமந்த் (5), ஜனனி (3) என இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ரவிக்குமாா் வழக்கம் போல, வியாழக்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பினாா். சாப்பிட்டுவிட்டு தூங்கியவா் படுக்கையிலேயே இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸாா், சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

காா்த்திகாவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ரவிக்குமாா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. காா்த்திகாவுக்கும், நத்தம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (23) என்பவருக்கும் தகாத உறவு இருந்தது. இதையறிந்த ரவிக்குமாா், காா்த்திகாவை கண்டித்தாா். இதனால் தனது உறவுக்கு இடையூறாக இருக்கும் ரவிக்குமாரை கொலை செய்ய விக்னேஷூடன் இணைந்து காா்த்திகா திட்டமிட்டாா்.

இதன்படி, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவிக்குமாரை, காா்த்திகா, விக்னேஷ், அவரது நண்பா் நாகராஜ் (28) ஆகியோருடன் சோ்ந்து தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.