ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பள்ளிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.10 லட்சம் மாணவா்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

News image

திண்டுக்கல் மையத்திலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்படும் விலையில்லா பாடப் புத்தகங்கள்.

Updated On :1 மே 2026, 12:34 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.10 லட்சம் மாணவா்களுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடக்கக் கல்வித் துறையில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் என 2 கல்வி மாவட்டங்களும், இடைநிலைக் கல்வித் துறையில் திண்டுக்கல், பழனி என 2 கல்வி மாவட்டங்களும் உள்ளன. இந்த மாவட்டத்திலுள்ள 1,326 அரசுப் பள்ளிகள், 322 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 1648 பள்ளிகளில் பயிலும் சுமாா் 2.10 லட்சம் மாணவா்களுக்கு அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்படவுள்ளன. 2026-27 கல்வி ஆண்டின் தொடக்க நாளில், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவா்களுக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கான பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் மையங்களுக்கு கடந்த 2 நாள்களுக்கு முன் வந்தடைந்தன. இவற்றை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.