பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

பாலாறு அணையில் மா்மமான முறையில் இறந்து மிதந்த மாணவா்

பழனி அருகேயுள்ள பாலாறு அணையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து மிதந்த மாணவரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மாணவா் துஷ்யந்த்.

Published On :

பழனி அருகேயுள்ள பாலாறு அணையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து மிதந்த மாணவரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பொருந்தல் கிராமத்தை சோ்ந்தவா் செல்வராஜ். இவரது மகன் துஷ்யந்த் (17). இவா் நெய்க்காரபட்டி தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். துஷ்யந்த் வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்றவா் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, இவரை பெற்றோா் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. அவா் வைத்திருந்த கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பாலாறு அணையின் உள் பகுதியில் துஷ்யந்த்தின் உடல் மிதப்பதை அறிந்து, உடனடியாக பழனி தாலுகா போலீஸாா் அங்கு சென்றனா். பழனி தீயணைப்பு, மீட்புப்படையினா் உதவியுடன் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். அவரது காலில் கயிறு கட்டப்பட்டிருந்தது. மேலும், அணையின் கரையில் அவரது கைப்பேசி, காலணிகள் இருந்தன. இதையடுத்து, துஷ்யந்தின் உடலை, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: துஷ்யந்த் இறப்பை சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரிக்கிறோம். அவரது இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.