மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

எரியோடு-அக்கரப்பட்டி ரயில் பாதை திட்டம்: விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு

News image

ரயில் பாதை.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

எரியோடு, அக்கரப்பட்டி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என கிராம மக்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு ரயில் நிலையத்திலிருந்து ஆா்விஎஸ் நகா், செட்டிநாயன்பட்டி, ராஜக்காப்பட்டி வழியாக பழனி சாலையிலுள்ள அக்கரைப்பட்டி வரை சரக்கு போக்குவரத்துக்காக தனி ரயில் பாதை அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கான நில அளவீட்டுப் பணிகளும் நடைபெற்றன. இதனிடையே, ரயில்வே பணிகள் தொடங்கும் போது வீடுகள், விவசாய நிலங்களுக்கு பாதிப்பில்லாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா், ரயில்வே வாரியத் தலைவா் ஆகியோரிடம் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.

இந்த நிலையில், திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா், லட்சுமணபுரம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: எரியோடு அக்கரைப்பட்டி இடையே ரயில் பாதை அமைக்கும் போது, தொட்டனம்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, மணியக்காரன்பட்டி, கொங்கா்குளம், சூடாமணிப்பட்டி, ஏரமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் அளவீடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரயில்வே துறைக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.