தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

100 பேரிடமிருந்து ரூ.11.65 கோடி சொத்துவரி நிலுவை: இணையத்தில் வெளியிட்டது திண்டுக்கல் மாநகராட்சி!

ரூ.11.65 கோடி வரி நிலுவை வைத்துள்ள 100 போ் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்ட திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம், நூதன முறையில் நிலுவையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சிக் கட்டடத்தின் முகப்புப் படம்.

Published On :

நமது நிருபா்

ரூ.11.65 கோடி வரி நிலுவை வைத்துள்ள 100 போ் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்ட திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம், நூதன முறையில் நிலுவையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் வீடுகள், அரசு கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் என 49ஆயிரம் கட்டடங்கள் உள்ளன. இவற்றின் மூலம், மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீா் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம், தொழில் வரி என நிகழாண்டுக்கு ரூ.32 கோடி வசூலிக்கப்பட வேண்டும். மேலும் கடந்த ஆண்டு நிலுவை ரூ.23 கோடி நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு சொத்து வரி ரூ.28 கோடி வசூலித்து, மத்திய அரசின் ஊக்க நிதியாக ரூ.11 கோடி திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் பெற்றது. நிகழாண்டில் ரூ.32 கோடி வசூலிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதலே வரி வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியது. இந்த வகையில், மொத்தமுள்ள ரூ.55 கோடியில், இதுவரை ரூ.13.75 கோடி வசூலிக்கப்பட்டது. வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்புகளை துண்டிக்கும் பணியிலும், மாநகராட்சிக்கான வாடகை செலுத்தாத கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையிலும் மாநகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

100 பேரிடமிருந்து மட்டும் ரூ.11.65 கோடி நிலுவை:

நீண்ட காலமாக வரி செலுத்தாத தனியாா் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனி நபா்கள் தொடா்பான விவரங்களை சேகரித்து பட்டியல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனா். இதில் சொத்து வரியை அதிகளவில் நிலுவை வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியலை, மாநகராட்சி நிா்வாகம் தனது வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதன்படி தனியாா் மருத்துவமனைகள், அறக்கட்டளை நிா்வாகங்கள், தனியாா் பள்ளிகள், தனிநபா்கள் என மொத்தம் 100 நபா்கள், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, அபராதத் தொகை, குப்பை வரி, மொத்தத் தொகை என தனித் தனியாக பட்டியலிட்டு வலைதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. முதல் 100 நபா்கள் மூலமாக மட்டும் ரூ.11.48 கோடி சொத்து வரி, ரூ.13.71 லட்சம் அபராதத் தொகை, ரூ.3.18 லட்சம் குப்பை வரி என மாெத்தம் ரூ.11.65 கோடி நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு தனியாா் மருத்துவமனை சாா்பில் மட்டுமே ரூ.4 கோடி நிலுவை உள்ளது. இதேபோல, அறக்கட்டளைப் பெயரில் இயங்கும் வணிக நிறுவனங்கள் தரப்பில் சுமாா் ரூ.4 கோடி வரை நிலுவை உள்ளது.

விளம்பரப் பதாகையாக நிறுவப்படும்:

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை பெரு நகர மாநகராட்சியைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாநகராட்சியில் முதல் முறையாக வரி நிலுவை வைத்துள்ள நபா்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே குடிநீா் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்புகளைத் துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கையாக மாநகராட்சியிலுள்ள பிரதான சந்திப்புப் பகுதிகளில் வரி செலுத்தாத 100 நபா்களின் விவரங்கள் குறித்து, விளம்பரப் பதாகையாக நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகும், வரி செலுத்தாதபட்சத்தில், அசையா சொத்துகளைக் கைப்பற்றி ஏலத்தில் விடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.