காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

நெகிழிப் பொருள்களை உண்ணும் காட்டு மாடு

கொடைக்கானல் எம்.எம். தெருவில் குப்பைத் தொட்டியில் கெட்டிய நெகிழிப் பைகளிலுள்ள உணவுப் பொருள்களை உண்ணும் காட்டு மாடு.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

கொடைக்கானலில் குப்பைத் தொட்டிகளில் கொட்டியுள்ள நெகிழிப் பொருள்களை காட்டுமாடுகள் உண்ணமாலிருக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினா் தெரிவித்தனா்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளிலுள்ள குப்பைகள், உணவுக் கழிவுகளை நெகிழிப் பைகளில் வைத்து அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளில் கெட்டப்படுகின்றன. இவற்றை காட்டுமாடுகள் உண்டு வருகின்றன.

இதனால், அந்த மாடுகளுக்கு செரிமான, சுவாச பிரச்னைகள் ஏற்படும். எனவே, குப்பைத் தொட்டிகளில் நெகிழிப் பொருள்களை பொதுமக்கள் கொட்டாமலிருக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

கொடைக்கானலில் நிகழாண்டு பருவமழை பொய்த்துப் போனது. இதனால், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி ஊருக்குள் வருகின்றன. இப்படி ஊருக்குள் வரும் காட்டுமாடுகள் குப்பைத் தொட்டிகளில் கொட்டிய நெகிழிப் பைகளை உண்ணுகின்றன. இதனால், அந்த வன விலங்குகளுக்கு செரிமான உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறன.

எனவே, பொதுமக்கள் நெகிழிப் பொருள்களை குப்பைத் தொட்டியில் கொட்டமாலிருக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.