ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் பகுதிகளில் வியாழக்கிழமை கடும் பனிப் பொழிவு நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பனியின் தாக்கம் நிலவி வருகிறது. பகலில் அதிக வெப்பமும், மாலை, இரவில் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை கடும் பனிப் பொழிவும், மேகமூட்டமும் நிலவியது. இதனால், கொடைக்கானல்-பெருமாள்மலை- குண்டாறு மலைச் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாகச் சென்றன.

இந்த சீதோஷ்ண நிலை காரணமாக இந்தப் பகுதிகளில் குளிா் வாட்டியது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.