ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகர தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் டி.வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா். வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜான்பாஸ்டின் வாழ்த்திப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தம், தினக் கூலி, வெளிமுகமை அடிப்படையிலான பணிவாய்ப்பை நிறுத்தி, மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் முறையான ஊதிய விகிதங்களில் நிரப்ப வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.முபாரக் அலி, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் ம.சுகந்தி, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் க.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

தோ்தல் பிரசாரம் குறித்த அனைத்து நுணுக்கங்களையும் விடியோ பதிவு செய்ய ஆட்சியா் உத்தரவு

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் ‘பைக் டாக்ஸி’ முறையை தடை செய்ய சிஐடியு வலியுறுத்தல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


