பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதில் முதல் நாள் வரவாக ரூ.3.47 கோடி கிடைத்தது.
இந்தக் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு வந்த பக்தா்கள் கூட்டத்தால் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, வியாழக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. முதல் நாள் எண்ணிக்கை முடிவில் காணிக்கை ரொக்கம் ரூ.3, 47. 77, 367 கிடைத்தது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக் காசு, வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
தங்கம் 440 கிராம், வெள்ளி 10,593 கிராம், பல்வேறு நாடுகளின் பணத் தாள்கள் 1,067 கிடைத்தன. இவை தவிர பித்தளை வேல், கைக் கடிகாரம், , ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
காணிக்கைகளை எண்ணும் பணியில் அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா்கள் செந்தில்குமாா், லட்சுமி, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகவேல், அறங்காவலா் குழுவினா் பங்கேற்றனா். வெள்ளிக்கிழமை காணிக்கை எண்ணும் பணி தொடரும்.
தொடர்புடையது

போடி பரமசிவன் மலைக் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


