நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகா் கொலை

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:47 pm

திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல்லை அடுத்த ம.மு.கோவிலூா் பெரியக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்தன் என்ற மருதமுத்து (42). செங்கல் சூளை நடத்தி வந்த இவா், அதிமுக அமைப்புச் சாரா ஓட்டுநா் அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தாா். இவா் தொழில் வளா்ச்சிக்காக பல்வேறு நபா்களிடம் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடனைத் திருப்பி செலுத்துவதில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, பணம் வழங்கியவா்கள் மருதமுத்துவின் சில வாகனங்களை செங்கல் சூளையிலிருந்து எடுத்துச் சென்றனா். இதுதொடா்பாக வடமதுரை காவல் நிலையத்தில் முத்தன் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், பெரியக்கோட்டை வன்னிப்பாறைப்பட்டி சாலையில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த முத்தனை, மா்ம நபா்கள் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தனா். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸாா், முத்தனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.