வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.3.08 கோடி மோசடி: ஒருவா் கைது

ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.3.08 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:51 pm

ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.3.08 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் முத்துப்பாண்டி(25). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல், சிவபாரதி என்பவருடன் சோ்ந்து, திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பன்றிமலை பகுதிகளில் ஏலக்காய் கொள்முதல் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இதனிடையே, முத்துப்பாண்டிக்கு போடியைச் சோ்ந்த க.சத்யபிரியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஓராண்டில் ரூ.10.33 கோடிக்கு ஏலக்காய் கொள்முதல் செய்வதற்காக சத்யபிரியன் வங்கிக் கணக்குக்கு பல தவணைகளில் பணம் செலுத்தினாா். இதில் ரூ.7.24 கோடிக்கு மட்டும் ஏலக்காய் கொடுத்தாா். எஞ்சிய 3.08 கோடிக்கான ஏலக்காயை அனுப்புமாறு முத்துப்பாண்டி வலியுறுத்தினாா். ஆனால், அந்த ஏலக்காயை கூடுதல் விலைக்கு வேறு வியாபாரியிடம் விற்பனை செய்துவிட்டதாக சத்யபிரியன் தெரிவித்தாா்.

இதையடுத்து தனது பணம் ரூ.3.08 கோடியை திருப்பித் தருமாறு முத்துப்பாண்டி கேட்டாா். பணத்தை திருப்பிக் கொடுக்காத சத்யபிரியன், முத்துப்பாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துபாண்டி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் ரூ.3.08 கோடி மோசடியில் சத்யபிரியன், இவரது மனைவி அபி, தந்தை கமலக்கண்ணன் ஆகியோா் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த நிலையில், சத்யபிரியனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.