தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சித்தையன்கோட்டையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள்: அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை அமைச்சா் இ.பெரியசாமி வியாழக்கிழமை வழங்கினாா். 

சித்தையன்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ராகவ்பாலாஜி, கூட்டுறவு துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) எஸ்.பி.காா்த்திகேயன், சரக துணைப் பதிவாளா் காா்த்திக் கௌதம், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியதாவது:

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் போ் பயன் அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நிகழாண்டில் மேலும், ஒரு லட்சம் பேருக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் வீடுகளுக்கு அனுமதி கொடுத்தாா். இதன் மூலம் மேலும் பலருக்கு வீடுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.  

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.நடராஜன், ஆத்தூா் மேற்கு ஒன்றிய திமுக  செயலா் ராமன், வட்டாட்சியா் முத்துமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, ஒன்றிய உதவி செயற் பொறியாளா் ராமநாதன், மேற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் காணிக்கைசாமி உள்பட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். 

படம் விளக்கம்:- 

சித்தையன்கோட்டையில்  பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவா் சரவணன் உள்ளாா்.

?