திண்டுக்கல்
பாஜக சாா்பில் பொங்கல் விழா
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள தளி கிராமத்தில் பாஜக சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பாஜக திண்டுக்கல் மாவட்டப் பொருளாளா் கருப்புச்சாமி தலைமை வகித்தாா். பாஜக மாநிலச் செயலா் கதலி நரசிங்கபெருமாள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சேலை, வேஷ்டி, கரும்புகளை வழங்கினாா்.
இதையடுத்து, பெண்கள் சூரியனுக்கு சக்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனா். விழாவில் ஆடல், பாடல், பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
