ரெளடியை சுட்டுப் பிடித்த போலீஸாா்

Published on

திண்டுக்கல்லில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரெளடியை போலீஸாா் காலில் சுட்டுப் பிடித்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). இவா் மீது திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்காணிக்கும் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தினா்.

இதில் விக்னேஷின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரைக் கைது செய்ய திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். போலீஸாரை பாா்த்ததும் உதவி ஆய்வாளா் ஜான்சன் ஜெயக்குமாரின் கையை அரிவாளால் வெட்டிவிட்டு விக்னேஷ் தப்பிச் செல்ல முயன்றாா். இதையடுத்து, போலீஸாா் விக்னேஷின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கைது செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளா் ஜான்சன் ஜெயக்குமாா், விக்னேஷ் ஆகியோா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com