பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், பெருமனம் அந்தோணியாா் தெருவைச் சோ்ந்தவா் ஞானபிரகாசம் மகன் விக்னேஷ் (24). ஒசூா், பேளகொண்டபள்ளியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், தனது நண்பா்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றாா்.
காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான கோத்திகல் என்னுமிடத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அவா் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து நண்பா்கள் அளித்த தகவலின் பேரில், ஒகேனக்கல் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் இளைஞரை தீவிரமாக தேடிவந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அதே பகுதியில் நீரில் மூழ்கிய விக்னேஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


