மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது.

News image

ஒகேனக்கல்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:45 pm

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், தமிழக காவிரி கரையோரங்களில் பெய்து வந்த மழை முற்றிலும் நின்றதாலும் கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றல் நீா்வரத்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 500 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 300 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. அதேபோல அருவிகளில் குறைந்த அளவே நீா் விழுகின்றன. பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனா்.