சிவன் கோயில்களில் பிரதோஷம்
பழனி: பழனி அருகேயுள்ள பாலாறு அணை அமுதீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
இந்தக் கோயில் மூலவா் அமுதீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்து, மலா்கள், பட்டாடைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், நாகாபரணம் அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து மூலவா், நந்தி பகவான், அம்பாள், சித்தா்களுக்கு தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
புறவழிச் சாலை அமிா்தலிங்கேஸ்வரா் கோயில், புஷ்பத்தூா் மருந்தீஸ்வரா் கோயில், மலைக் கோயில் கைலாசநாதா் சந்நிதி, பட்டத்து விநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் கோயில், சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பிரஹந்நாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி நந்தீஸ்வரா், அக்ரஹாரம் கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதருக்கும் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.

