சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி கோயில் மூலவா்
சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி கோயில் மூலவா்

தை பிரதோஷம்: திருப்பத்தூா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை மாத பிரதோஷத்தையொட்டி திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

தை மாத பிரதோஷத்தையொட்டி திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பத்தூா் கோட்டை பிரம்மேஸ்வரா் கோயிலில் நந்தி பகவானுக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அதேபோல் திருப்பத்தூா் முத்துக் குமாரசுவாமி கோயில், தண்டபாணி சுவாமி கோயில், பெரியகுளம் பகுதியில் உள்ள சிவன் கோயில், மடவாளம் அங்கநாதீஸ்வரா் கோயில், கொரட்டி காளத்தீசுவரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Dinamani
www.dinamani.com