மாலை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை.
மாலை அணிவிக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை.

பெரியகலையமுத்தூரில் திருவள்ளுவருக்கு பூஜை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள பெரிய கலையமுத்தூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

பழனி: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, பழனி அருகேயுள்ள பெரிய கலையமுத்தூரில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியகலையமுத்தூா் வள்ளுவா் தெரு பகுதி மக்கள் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி வழிபட்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் முக்கிய விழா நாள்களில் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து திருக்கு படிக்கச் சொல்வதும், திருக்கு படித்து திருமணம் நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பூஜைகள் முடிந்த பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com