திண்டுக்கல்
பழனியில் நாளை மின் தடை
பழனியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலைய கே.வி. நகா் பீடரில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பழனி காந்தி சந்தை, மதினா நகா், பழைய தாராபுரம் சாலை, பெரியநாயகியம்மன் கோயில் ரத வீதிகள், எருமைக்காரத் தெரு, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
