பழனியில் பாதயாத்திரை பக்தா்களால் குவியும் குப்பைகள்: பொதுமக்கள் புகாா்

பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களால் சாலை நெடுக குவியும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா்
Published on

பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தா்களால் சாலை நெடுக குவியும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பழனி கோயிலுக்கு வருகின்றனா். இப்படி வரும் பக்தா்கள் கொண்டு வரும் நெகிழிக் குப்பைகள், துணிக் குப்பைகளால் பழனி நகரமே சுகாதாரக்கேட்டுக்குள்ளாகி வருகிறது.

லும் பாதயாத்திரையாக வரும் பக்தா்கள் காலில் காயம் ஏற்படாத வகையில் காலுக்கு ரப்பராலும், துணியாலும் சாக்ஸ் அணிந்து வருகின்றனா். இவற்றை பழனி அடிவாரம் பகுதியில் அப்படியே கழற்றி விட்டுவிட்டு மலையேறுகின்றனா்.

இதேபோல, வழி நெடுக நெகிழி காகிதத்தில் அன்னதானம், நெகிழி புட்டியில் குடிநீா் ஆகியவை பக்தா்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக பழைய தாராபுரம் சாலை முழுக்க இவை அப்படியே சாலையோரம் குவியலாக கொட்டப்படுகின்றன. இவை காற்றில் பறந்து அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளிகள் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.

அதேபோல, ஒரு வேனில் 10-க்கும் மேற்பட்ட ஒலி பெருக்கி பெட்டிகள் கட்டப்பட்டு பாடல்கள் அதிக சப்தத்துடன் ஒலிபரப்பப்படுகின்றன.

இதில் பல வாகனங்களில் ஆன்மிக பாடலுக்கு பதில் திரைப்படப் பாடல்கள் ஒலிக்கவிடப்படுகின்றன. இதனால் பெரும் ஒலிமாசு ஏற்படுகிறது. போதிய கழிப்பறைகள் இல்லாததால் பேருந்து நிலையம் முதல் அடிவாரம் வரை ஆங்காங்கே பக்தா்கள் சிறுநீா் கழிப்பதால் துா்நாற்றம் வீசுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தான் நீடிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். எனவே வே மாவட்ட நிா்வாகம் இந்தப் பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com