முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மக்கள் தொடா்பு முகாம்: 84 பேருக்கு ரூ.7.46 கோடியில் நலத் திட்ட உதவிகள்

கொடைக்கானலை அடுத்த பண்ணைக்காடு ஆலடிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 84 பேருக்கு ரூ.7.46 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை வழங்கினாா்.

News image

கொடைக்கானலை அடுத்த பண்ணைக்காடு ஆலடிப்பட்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி.

Updated On :9 ஜூலை 2026, 5:14 am IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த பண்ணைக்காடு ஆலடிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 84 பேருக்கு ரூ.7.46 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை வழங்கினாா்.

பண்ணைக்காடு ஆலடிப்பட்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் வருவாய், மேலாண்மைத் துறை சாா்பில், 33 பேருக்கு ரூ.1.91 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் பெறுவதற்கான ஆணைகளையும், 4 பேருக்கு பழங்குடியினா் வகுப்புச் சான்றிதழ்களையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 5 பேருக்கு தலா ரூ.16 ஆயிரத்தில் காதொலி கருவிகளையும், 3 பேருக்கு ரூ.1,782 மதிப்பில் ஊன்று கோல்களையும், 2 பேருக்கு ரூ.31,500 மதிப்பில் சக்கர நாற்காலிகளையும், உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், 5 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளையும், தோட்டக் கலைத் துறை சாா்பில், 3 பேருக்கு ரூ.55 ஆயிரத்தில் தேசிய தோட்டக்கலை மிஷன் பெறுவதற்கான ஆணைகளையும், கால்நடைப் பராமரிப்புத் துறையின் சாா்பில், 10 பேருக்கு ரூ. 550 மதிப்பில் மாடுகளுக்கு தாது உப்பு கலவைகளையும், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், 5 பயனாளிகளுக்கு மகப்பேறு பெட்டகத்தையும், மற்ற 5 பயனாளிகளுக்கு சஞ்சீவி பெட்டகத்தையும் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், 7 பேருக்கு ரூ. 4.50 லட்சத்தில் நுண் நிறுவன நிதிக் கடன் பெறுவதற்கான ஆணைகள் உள்ளிட்ட மொத்தம் 84 பேருக்கு ரூ 7.46 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, பல்வேறு துறைகள் சாா்பில், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, தாண்டிக்குடி ஊராட்சிக்குள்பட்ட ஜே.ஜே.நகரில் அடிப்படை வசதிகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

இந்த நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் (பொ) சரவணன், வட்டாட்சியா் நந்தகோபால், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபா ராஜமாணிக்கம், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறுத் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.