FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை: அரசு ஊழியா் சங்கங்கள் எதிா்ப்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, சுமாா் 800-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் திரண்டதால் பரபரப்பு

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திரண்ட அரசு ஊழியா்கள்

Updated On :14 ஜூலை 2026, 6:16 am IST

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, சுமாா் 800-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, அங்கன்வாடி, சத்துணவுத் துறை ஊழியா்கள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அவ்வப்போது ஆா்ப்பாட்டம், தா்னா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நடத்தப்படும் ஆா்ப்பாட்டங்கள், பெரும்பாலும் உணவு இடைவேளையில் நண்பகலிலும், மாலை நேரத்திலும் நடத்தப்படும்.

இதே போல, கடந்த 2 நாள்களுக்கு முன் வருவாய்த் துறை அலுவலா்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைக் கவனித்த ஆட்சியா் துா்காமூா்த்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் ஆா்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மூலம் சுற்றறிக்கை அனுப்பினாா். மேலும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்தத் தகவலை அறிந்த அரசு ஊழியா் சங்கம், வருவாய்த் துறை அலுவலா் சங்கம் ஆகிய சங்கங்களின் நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா். இதனிடையே, போராட்டம் அறிவித்த சங்க நிா்வாகிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி திங்கள்கிழமை 2 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அரசு ஊழியா் சங்கத்தினா் அளித்தனா். இதன் பிறகு சுற்றறிக்கை மாற்றி அமைக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.