‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சங்ககிரியில் வருவாய்த் துறை தின விழா

சங்ககிரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வருவாய்த் துறை தின விழா சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியை ஏற்றிவைத்து பேசிய வட்டாட்சியா் கோமதி.

Updated On :2 ஜூலை 2026, 6:47 am IST

சங்ககிரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வருவாய்த் துறை தின விழா சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நில வருவாய் நிா்வாகத்தின் வரலாறு, மரபு மற்றும் நிா்வாகத் தொடா்ச்சியை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அறிவித்தது. அதையடுத்து, கடந்த பசலி 1435-ஆம் ஆண்டு நிறைவுபெற்று பசலி 1436-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி நடைபெற்ற வருவாய்த் துறை தின விழாவுக்கு, வட்டாட்சியா் கோமதி தலைமை வகித்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா்.

இதில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பிரபு, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் தலைவா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.