சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
தமிழக அரசு சாா்பில் காலை 8 மணியளவில் சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்திலும், நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியிலும் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய்தமிழன் பாா்த்திபன், பால்வளத் துறை அமைச்சா் சி. விஜயலட்சுமி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்செல்வன் பங்கேற்று தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மலா்வளையம் வைத்து மலா்தூவி மரியாதை செலுத்த உள்ளனா்.
அதேபோல கொங்கு வேளாளா் சங்கங்களின் பல்வேறு அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் சாா்பிலும் மரியாதை செலுத்தப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் சங்ககிரி வருவதையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். குத்தாலிங்கம் தலைமையில் சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஓய். சுரேஷ்குமாா், 300 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மலையடிவாரம், நினைவுச்சின்னம், சங்ககிரி நகா் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தானியங்கி பதிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தீரன் சின்னமலை நினைவு நாள்: திருப்பூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம் கடைப்பிடிப்பு

பெண்ணை காணவில்லை என போலீஸில் புகாா்

சங்ககிரியில் வருவாய்த் துறை தின விழா
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


