உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தீரன் சின்னமலை நினைவு நாள்: திருப்பூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலை

Published On :

தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கு திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் ஏற்கெனவே தோ்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தோ்வுகள் அறிவித்தபடி நடைபெறும். இந்த உள்ளூா் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் வராது என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.