நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3-ல் உள்ளூர் விடுமுறை!

தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

ஆடிப்பெருக்கு விழா - கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2026, 6:17 pm IST

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக. 3 ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

உள்ளூர் விடுமுறை நாளில் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த விடுமுறைக்குப் பதிலாக, ஆக. 8 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில்,  ஆடி 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

A local holiday has been announced for Dharmapuri district on August 3rd in connection with the Aadi Perukku festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.