10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

ஜூலை 28 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி மாவட்டத்துக்கு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி...

Local holiday for tenkasi district on july 28

சங்கரன்கோவில் ஆடித் தபசு திருவிழா - sankarankovil.com

Published On :

சங்கரன்கோவில் ஆடித் தபசு திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஜூலை 28 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியும் சிவனும் வேறல்ல, ஒன்றுதான் என உலகத்திற்கு உணர்த்தும் வகையில், தவமிருந்த அம்பாளுக்கு சங்கர - நாராயணராக சுவாமி காட்சி அளிக்கும் 'ஆடித்தபசு' திருவிழா, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டும் வருகிற ஜூலை 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் 12 நாள் விழா தொடங்குகிறது. இதில் 11 ஆம் நடக்கும் முதன்மையான விழாவே ஆடித்தபசு ஆகும். ஜூலை 28 ஆம் தேதி மாலை அம்பாளுக்கு சங்கர - நாராயணராக சுவாமி காட்சி அளிக்கும் ஆடித்தபசு காட்சி நடைபெற உள்ளது. அதன்பின்னர் சங்கர லிங்கராக அம்பாளை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு அன்று இரவில் நடைபெறும்.

இந்த திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்துக்கு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக.1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் கூறியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தேர்வுகள் இருப்பின் விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Local holiday for tenkasi district on july 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.