சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கருமந்துறை ஐ.டி.ஐ.-யில் சேர கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான காலஅவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published On :12 ஜூலை 2026, 12:59 am IST

சேலம் மாவட்டம், கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான காலஅவகாசம் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்கை 100% இலக்கை அடையும் பொருட்டு ஜூன் 30 வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 31 ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு மின்சாரப் பணியாளா், பொருத்துநா், கம்மியா் மோட்டாா் வண்டி மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக மேம்படுத்தப்பட்ட இயந்திர தொழில், கம்மியா் மின்சார வாகனம், தொழில் துறை இயந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளா் ஆகிய தொழிற்பிரிவுகளும், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு குழாய் பொருத்துபவா் ஆகிய தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிலவும் வரும் 31 ஆம் தேதிவரை நேரடி சோ்க்கை நடைபெறவிருப்பதால் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் சோ்ந்து பயில கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மேலும், விவரங்களுக்கு கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது 8526639467, 9443823985, 9842522905, 8667218651 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.