மகாராஷ்டிரத்தில் டிடர்ஜென்ட் எனும் சோப் பவுடர், பாமாயில் கொண்டு தயாரிக்கப்பட்ட நச்சுள்ள பால், மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 2.3 கோடி லிட்டர் இவ்வாறு தயாரிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாக (FDA) அதிகாரிகள் சமீபத்தில் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து வருகின்றனர். பூம் மாவட்டத்தில் கலப்பட பால் குறித்த தகவலின் அடிப்படையில், ஆய்வு மேற்கொண்டதில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலில் கலப்படத்திற்காக சுமார் 2,30,470 கிலோகிராம் தரமற்ற பால் பவுடர் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த பால் பவுடரில் டிடர்ஜென்ட் எனும் சோப்பு பவுடர், பாமாயில், ரசாயனப் பொருள்கள் இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
இந்த பால் பவுடரைப் பயன்படுத்தி 2,30,470 செயற்கைப் பால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 9 கோடியே 21 லட்சத்து 62 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும்.
ஒவ்வொரு 100 லிட்டர் தரமான பாலுடன், 10 லிட்டர் நச்சுள்ள போலியான பால் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2.3 கோடி லிட்டர் பால் மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் குறிப்பாக பூம் (Bhoom) மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நிறுவன உரிமையாளர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவான அவர்களை காவல்துறை தேடி வருகிறது. இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நச்சுள்ள கலப்பட பாலைக் குடித்தால் கல்லீரல், சிறுநீரகம் செயலிழக்கும் எனவும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோருக்கு மரணத்தைக்கூட ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பால் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன.
Summary
2.3 Crore Litres Of Synthetic Milk Made With Detergent Powder distributed In Maharashtra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் திட்டம்!

தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!

கடந்த ஆண்டை விட 36,000 லிட்டர் பால் விநியோகம் அதிகரிப்பு! ஆவின் விளக்கம்

பால் கொள்முதலில் பற்றாக்குறை... தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் குறைப்பு!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy




