பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

கடந்த ஆண்டை விட 36,000 லிட்டர் பால் விநியோகம் அதிகரிப்பு! ஆவின் விளக்கம்

சென்னையில் பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திக்கு ஆவின் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

News image

ஆவின் பால் - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 9:41 pm IST

சென்னை பெருநகரப் பகுதியில் பால் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஆவின் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை பெருநகரம் முழுவதும் அனைத்து வகையான பால் வகைகளையும் ஆவின் நிறுவனம் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து விநியோகித்து வருகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

சராசரியாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.

ஜூன் 2025 காலகட்டத்தில் 14.46 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டது. 2026 ஜூன் காலகட்டத்தில் 14.82 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 36,000 லிட்டர் பால் கடந்த ஆண்டை விட அதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என நுகர்வோர், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஆவின் விளக்கம் அளித்துள்ளது.

Summary

Milk supply up by 36,000 litres compared to last year! Aavin's explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.