8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகம் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Nainar Nagendran

நயினார் நாகேந்திரன். - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 2:55 pm IST

தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகம் நடப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விநியோகம் 30% குறைந்துள்ளதாகவும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தின் போது சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பாலின் தினசரி விநியோகம், தற்போது 13.5 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. முந்தைய ஸ்டாலின் அரசும் சரி, தற்போதைய ஜோசப் விஜய் அரசும் சரி, ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படைத் தேவையிலேயே கைவைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிக உற்பத்தி செலவின் காரணமாக ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் உற்பத்தியை அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது என்பதை நாம் சுட்டிக்காட்டிய போது, கொதித்தெழுந்து அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் தற்போது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? தனியார் நிறுவனங்களிடம் அதிகரிக்கும் பால் கொள்முதலை அரசுக்கானதாக்கி, செலவினங்களைக் குறைத்து பால் உற்பத்தியைப் பெருக்க திறனில்லாத விஜய்யின் நிர்வாகத் தோல்விக்கு, தமிழக மக்களின் ஆரோக்கியம் பாழாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, அரசு பால் நிறுவனத்தை எப்படி திறம்பட கையாள வேண்டும் என்பது குறித்த அடிப்படை நிர்வாகம் தெரியவில்லை என்றால், “அமுல்” உள்ளிட்ட அரசு பால் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் பிற மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் கேட்டு தெரிந்து கொண்டு, தமிழகத்தில் தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகம் நடப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Government of Tamil Nadu must ensure the uninterrupted supply of Aavin milk, stated BJP State President Nainar Nagendran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.