/

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்படவில்லை: தமிழக அரசு

ஆவின் நிறுத்தின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்ட வில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறித்து...

News image

ஆவின் கிரீன் மேஜிக் நிறுத்தப்படவில்லை - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 1:22 pm IST

ஆவின் நிறுத்தின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்ட வில்லை என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, விநியோகம் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மிக அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் ஆவின் பச்சைப் பால். இந்த வகை பாலை விற்பனை செய்வதால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் தான் பற்றாக்குறை, நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைத்து வருவதாகவும், பச்சைப் பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

விநியோகம் நிறுத்தப்பட்டவில்லை

இதையடுத்து ஆவின் நிறுத்தின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டவில்லை என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, விநியோகம் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான "கிரீன் மேஜிக்" பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், அதில் கிரீன் மேஜிக் பாலும் உள்பட, தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் கிரீன் மேஜிக் பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Summary

Regarding the Tamil Nadu government's statement that the distribution of Aavin's green-packet milk has not been stopped...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.