தமிழ்நாட்டில் நாளை முதல் (ஜூலை 9) ஆரோக்கியா நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
நாடு முழுவதும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தி குறைந்துள்ளதால், பல்வேறு பகுதியில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கோடை மழை பெய்யாததால் தீவினங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பால் உற்பத்தி குறைந்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் இடையே பால் கொள்முதலுக்கு போட்டி அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகின்றனர்.
இதனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 2 வரை விலையை உயர்த்தினர். தற்போது வாகன எரிபொருள் விலை உயர்வு, பால் உற்பத்திகான மூலப் பொருள் உயர்வு போன்றவற்றையால் மீண்டும் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளனர்.
அதன்படி, ஆரோக்கியா பால், தயிர் விலையை நாளைமுதல் உயர்த்துவதாக ஹட்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி,
500 மிலி பதப்படுத்தப்பட்ட (டோன்டு) பால் மில்க் - ரூ. 29-லிருந்து ரூ. 31 ஆக உயர்வு
500 மிலி நிலையான (ஸ்டாண்டர்டு) பால் - ரூ. 35-லிருந்து ரூ. 37 ஆக உயர்வு
500 மிலி ஃபுல் க்ரீம் பால் - ரூ. 39-லிருந்து ரூ. 41 ஆக உயர்வு
ஒரு லிட்டர் பதப்படுத்தப்பட்ட (டோன்டு) பால் மில்க் - ரூ. 54-லிருந்து ரூ. 57 ஆக உயர்வு
இதேபோல், ஆரோக்கியா தயிர், ஹட்சன் தயிர் உள்ளிட்டவை 500 மிலிக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், மற்ற தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் உள்ளிட்ட பொருள்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Prices of private milk and curd to rise in Tamil Nadu starting tomorrow!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகாது? காரணம் என்ன?

பால் கொள்முதலில் பற்றாக்குறை... தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விநியோகம் குறைப்பு!

புதுச்சேரியில் 15 % லாரி வாடகை உயா்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது

தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!




