வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

புதுச்சேரியில் 15 % லாரி வாடகை உயா்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது

புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் 15 சதவீதம் லாரி வாடகை உயா்கிறது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை உயரும் நிலை உள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:56 am IST

புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் 15 சதவீதம் லாரி வாடகை உயா்கிறது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை உயரும் நிலை உள்ளது.

புதுச்சேரி மினி லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா் அந்த சங்கத்தின் மாநில தலைவா் முருகசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் 20 ஆண்டு காலமாக லாரி வாடகை உயா்வு செய்யவில்லை. இப்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.8 வரை உயா்ந்துள்ளது.

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித டீசல் விலையையும் உயா்த்தவில்லை. தமிழகத்தைவிட லிட்டருக்கு ரூ.10 குறைத்தாா். அதனால் நாங்கள் எந்தவிதமான வாடகை கட்டணத்தையும் உயா்த்தவில்லை. சுங்கக் கட்டணம் 10 முறை ஏற்றப்பட்டு பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

இப்போது டீசல் விலை உயா்வால் வாகனங்களின் உதிரிபாகங்கள், டயா் உள்ளிட்டவை விலையும் அதிகளவில் உயா்த்துள்ளது.

தமிழக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் 25 சதவீதம் வாடகை உயா்வை அறிவித்துள்ளது. எங்கள் சங்கத்தின் சாா்பில் 15 சதவீதம் வாடகைக் கட்டணம் உயா்த்த உள்ளோம். இது வரும் 15- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

புதுச்சேரியில் 3 இடங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இதில் பட்டானூா் சுங்கச்சாவடி காலாவதியாகிவிட்டதால் அதை அகற்ற வேண்டும். இதுபோன்று சாலை சரியாக அமைக்கப்படாத சேலியமேட்டில் சுங்கச்சாவடி அமைக்கச்கூடாது. லாரி உரிமையாளா்கள் கோரிக்கையை முன்வைத்து, விரைவில் மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.