2025 - 26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாள்கள் இருக்கிறதே என்று ஜூலை 31ஆம் தேதி வரை காத்திருப்பது நல்ல யோசனை அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஜூலை 31ஆம் தேதி வரை காத்திருப்பது, தாமதக் கட்டணம் செலுத்தி கணக்கை தாக்கல் செய்வதற்கோ, சில வரிச் சலுகைகளைப் பெற முடியாமல் போவதற்கோ வழிவகுத்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.
நேரமேயில்லை, உடனடியாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியதுதான் ஒரே வழி என்றும் வலியுறுத்தப்படுகிறது.
அதாவது, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு தாக்கல் செய்ய முடியாமல் போகலாம், தவறாக தாக்கல் செய்தால், சரி செய்ய நேரம் இல்லாமல் ஆகிவிட்டாலோ, சில சிறிய தவறுகள் வரிச் சலுகை பெறுவதிலிருந்து தடுக்கலாம்.
தாமதக் கட்டணம்
ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியது வரும். இதுவரை வருமானக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒரே ஒரு இணையதளத்தை நாடுவார்கள். இதனால் எந்த விதமான சிக்கலும் வரலாம்.
சில வேளைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்படலாம். ஆனால் அந்த தொழில்நுட்பக் கோளாறு ஒருசிலருக்கு மட்டும் நேரிட்டிருந்தால்...
"பங்குகள் (equity), F&O அல்லது சொத்து விற்பனை மூலம் ஏற்படும் மூலதன இழப்புகளை, ஜூலை 31-க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும். ஒரு நாள் தாமதமாகத் தாக்கல் செய்தாலும் அந்தச் சலுகை நிரந்தரமாக இழக்கப்படும்.
கால அவகாசத்தைத் தாண்டி கணக்குத் தாக்கல் செய்யும்போது, பழைய வரி முறையில் தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். சில இடங்களில், செலுத்தப்படாத வரி மீதான பிரிவு 234A-இன் கீழ் வரும் வட்டியானது ஆகஸ்ட் 1 முதல் கணக்கிடத் தொடங்குகிறது.
படிவம் 16 தயாராக இருந்திருக்கலாம், ஆனால், திரும்ப செலுத்துவதற்கான வரி அமைப்பு தயாராக இல்லாமல் இருக்கலாம்.
வருமான வரித் தொகை திரும்பப்பெறுவதில் இரண்டு நடைமுறைகள் உள்ளன. சில வேளைகளில், வருமான வரிக் கணக்கு இணையதளத்தில், வங்கிக் கணக்கு இணைக்கப்படாமல் இருக்கலாம். உரிய காலத்துக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் வங்கிக் கணக்கு இணைக்கப்படுவதற்கு கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.
ஆண்டு தகவல் அறிக்கை பொருந்தாமல் போகலாம்,
வருமான வரித்துறையிடம் ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன், வருமான வரிக் கணக்குத் தாக்கல் பொருந்தாமல் போனால், அது பற்றி விளக்கம் கோரி பெற நேரம் கிடைக்காது.
இதுபோன்ற பல காரணங்கள் இருப்பதால், ஜூலை 31ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படிவம் 16-ல் வரி இல்லை என்றால்.. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய அவசியமில்லையா?

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி நாள் எப்போது?

வருமான வரிக் கணக்கு தாக்கல்! படிவம் 16 கிடைக்கவில்லையென்றால்?

பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லையா? ஐடிஆர்-யு வந்துவிட்டது!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |



