சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லையா? ஐடிஆர்-யு வந்துவிட்டது!

ஒரு சில ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்காக ஐடிஆர்-யு கொண்டுவரப்பட்டுள்ளது.

Income tax

வருமான வரி - கோப்புப்படம்.

Published On :

ஒருவர் ஏதோ சில காரணங்களால், தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் விட்டிருந்தால், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் அபாயம் உள்ளது.

தற்போதிருக்கும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் நடைமுறைப்படி, ஒருவர், ஒரே ஒரு மற்றும் அந்தந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில், 2026 - 27ஆம் ஆண்டுக்கான கணக்கை தாக்கல் செய்யும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். முந்தைய ஆண்டுகளுக்கான வாய்ப்புகள் லாக் செய்யப்பட்டிருக்கும்.

எனவே, வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய மறந்தவர்களுக்காகவே அப்டேட்டட் ஐடிஆர் (ஐடிஆர்-யு) நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையைப் பயன்படுத்தி, ஒருவர் நான்கு ஆண்டுகள் வரை தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும்.

ஒருவர், இந்த வழிமுறையைப் பின்பற்றி, தவறிய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொள்ளலாம். அதாவது, 2022 - 23, 2023 - 24, 2024-25, 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம்.

அபராதம் செலுத்த வேண்டும்

இந்த அப்டேட்டட் ஐடிஆர் என்பது அபராதம் செலுத்தியே தாக்கல் செய்யும் முறையாகும். அது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் செலுத்தும் வரி நிலுவைக்கும் வட்டி கணக்கிட்டு அபராதமாக செலுத்த வேண்டியது வரும். எத்தனை ஆண்டுகள் வரியை செலுத்தவில்லை, வரி எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு இந்த அபராதத் தொகை வசூலிக்கப்படும்.

ஐடிஆர்-யு பயன்படுத்தாவிட்டால்?

வருமான வரித்துறையே கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பினால், அபராதத் தொகை அதிகம்.

நாமே முன்வந்து ஐடிஆர்-யு மூலம், தவறவிட்ட வருமான வரிக் கணக்கை பூர்த்தி செய்து கொண்டால், குறிப்பிட்டால் குறைந்த அபராதத் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு செலுத்த வேண்டியது வரும். தவறினால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடலாம்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்படவில்லையே என்ற நெருடல் இல்லாமல் அபராதத்தை செலுத்தை அதனை பூர்த்தி செய்துவிட்டால், நிம்மதியாக இருக்கலாம்.

நான்கு ஆண்டுகள் வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, இதனை குறைந்த ஆண்டுகள் இருக்கும்போதே பயன்படுத்தி பலன்பெறுவது நல்லது.

Summary

Haven't filed your income tax return for several years? ITR-U is here!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.