வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் நேரம் தோடங்கிவிட்டது. ஒவ்வொருவரும் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இணையதளத்தில் லாக்-இன் செய்யும் முன்பு, அது தொடர்பான அனைத்து ஆவணங்களையில் கையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், கையில் வைத்திருக்கும் ஆவணங்களையும் ஒன்றுக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். படிவம் 16, படிவம் 26ஏஎஸ், ஆண்டு தகவல் அறிக்கை, வட்டி வருவாய் அறிக்கை போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் முன்கூட்டியே அதனை சரி செய்ய வேண்டும்.
பொதுவாக மாத ஊதியம் பெறுவோருக்கு படிவம் 16, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான முக்கிய ஆவணம். அந்த ஆவணம்தான், ஒருவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை உறுதி செய்யும் ஆவணம். அதில், பிடித்தம் செய்யப்பட்ட வரி, நிறுவனம் செலுத்திய வரித் தொகை என அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.
படிவம் 16 என்பது, மிக விரைவாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவும், எளிமையாகவும், தவறுகள் நிகழாமல் தடுக்கவும் வழிவகை செய்யும்.
ஒவ்வொரு நிறுவனமும், அவர்களது ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் படிவம் 16ஐ வழங்குவது அவசியம். அதில்தான் டிடிஎஸ் பிடித்தம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். ஒருவேளை படிவம் 16 இல்லாமல், கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், மற்ற விவரங்களை மிகக் கவனமாக பதிவு செய்ய வேண்டும். படிவம் 26ஏஎஸ் கொண்டு அல்லது ஆண்டு தகவல் அறிக்கை, மாத வருவாய் சான்றிதழ் கொண்டும் நிரப்பலாம்.
தற்போது படிவம் 16 இரண்டு வகைகளாக வருகின்றன. ஒன்று அடையாளங்கள், டிடிஎஸ் பிடித்தம், பான், டான், வரி பிடித்தம், முதலீடுகள் தொடர்பான விவரங்களுடன் இருக்கும்.
இரண்டாவது பிரிவில், வருவாய் விகிதங்கள், விதி விலக்குகள், பிடித்தம், இறுதியாக செலுத்த வேண்டிய வரித் தொகை இடம்பெற்றிருக்கும்.
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஜூன் 15ஆம் தேதிக்குள், ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்கப்பட வேண்டும். ஒருவேளை, படிவம் 26ஏஎஸ் அல்லது ஆண்டு தகவல் அறிக்கையில் ஊதிய விவரங்கள் தெளிவாக இல்லாவிட்டால், நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் உதவியை நாடலாம் என்று கூறப்படுகிறது.
Summary
Filing Income Tax Returns! What if you haven't received Form 16?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








