கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தக் கூடாது என வருவாய் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அரசுப் பணிகளுக்கும், அத்தியாவசிய தேவைக்காகவும் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தலாம். தனியாா் பணிகளுக்காக அனுமதி பெறாமல் பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு அனுமதி பெற்ற பிறகு அனுமதி கடிதத்தை பொக்லைன் இயந்திரம் முன்பக்க பகுதியில் ஒட்ட வேண்டும். உரிய அனுமதி பெறாமல் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். இயந்திர பயன்பாடு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
கடந்த வாரத்தில் இரண்டு பொக்லைன் இயந்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அந்தப் பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் வசதிக்காக வாகன நிறுத்தம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம், 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்

பொக்லைன் இயந்திரம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு
அரசுப் பேருந்துகளில் சப்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

கொடைக்கானலில் அனுமதியின்றி பாறைகள் உடைக்கும் பணி
விடியோக்கள்



