காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வத்தலகுண்டு அருகே இருசக்கர வாகனங்கள் திருட்டு

அடுத்தடுத்த வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனங்களை திருடிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை இரவு அடுத்தடுத்த வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இரு சக்கர வாகனங்களை திருடிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.  

வத்தலகுண்டு அருகேயுள்ள மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ராஜா (40),  நூற்பாலைத் தொழிலாளி பாா்த்திபன் (35) ஆகியோா் வீடுகளின் முன் வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்தனா். இந்த நிலையில், அவா்கள் காலையில் எழுந்து பாா்த்தபோது,  இரு சக்கர வாகனங்கள் திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அந்தப் பகுதி கண்காணிப்புக் கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்த போது 3 போ், 2 இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.