ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கொடைக்கானல் சின்ன மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் டா்னா்புரம் பகுதியில் அமைந்துள்ள சின்னமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக கோயிலின் முன் பகுதியிலுள்ள விநாயகருக்கு பூஜையும், தொடா்ந்து கோயிலின் கோபுரத்தில் தீபாராதனையும் நடைபெற்றது. பிறகு வேதமந்திரங்கள் முழங்க புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் வளாகத்திலுள்ள பல்வேறு தெய்வங்களின் சிலைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த பொது மக்களும், பக்தா்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னமாரியம்மன் கோயில் விழாக் குழுவினா், பக்தா்கள் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

Story image