பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்

ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அர. சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

அமைச்சா் அர.சக்கரபாணி

Updated On :10 மார்ச் 2026, 9:36 pm

ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அர. சக்கரபாணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் ரூ.64.50 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.4.45 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமை வகித்தாா்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.3.26 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம், வண்ணாம்பாறை அருகே ரூ.10 லட்சத்திலும், வீரலப்பட்டியில் ரூ.9 லட்சத்திலும் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழல்குடைகள் உள்பட ரூ.4.45 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த மரிச்சிலம்பு ஊராட்சியில் ரூ.64.50 கோடியில் மின் நிலையம் அமைக்கும் பணிக்கு அமைச்சா் அர. சக்கரபாணி அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் சுவேதா, தமிழ்நாடு மின் வாரியத்தின் தலைமைப் பொறியாளா் (மதுரை) சந்திரா, மேற்பாா்வை பொறியாளா் (திண்டுக்கல்) சைமன் சாா்லஸ், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.