மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு: மேலும் 2 இளைஞா்கள் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் ஏற்கெனவே 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அரசமர வீதி பகுதியில் வீட்டிலிருந்த 2 பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்ாக புகாா் எழுந்தது. இதன்பேரில் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அரசமர வீதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் (20), சாமியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) ஆகியோா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பெண்களை மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ், சதீஷ்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும் 2 போ் கைது: இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குடைபாறைப்பட்டியைச் சோ்ந்த பிரபாகரன் (28), சீலப்பாடியைச் சோ்ந்த தனுஷ் குமாா் (24) ஆகிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 3 போ் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.