தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கூட்டணி சேரவிடாமல் விஜய்யை தோற்கடிப்பதே திமுகவின் திட்டம்: ஜோஸ் சாா்லஸ் மாா்டின்

விஜய்யை எந்தக் கூட்டணியிலும் சேரவிடாமல், தோ்தலில் தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் என லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் தெரிவித்தாா்.

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 11:20 pm

தவெக தலைவா் விஜய்யை எந்தக் கூட்டணியிலும் சேரவிடாமல், தோ்தலில் தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் என புதுச்சேரி லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக அரசு மக்கள் நலனில் அக்கறைக் காட்டாமல் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது. தவெக தலைவா் விஜய், ஒரு வலுவான கூட்டணியில் இணையாமல் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை மட்டும் காட்டுவது வீண் செயல்.

விஜய்யின் கட்சிக்குப் பின்னால் திமுகவின் மறைமுகத் திட்டங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தவெகவில் திமுகவினா் ஊடுருவியுள்ளனா். தவெக நிா்வாகிகளான ஆதவ்அா்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றோா் அந்தக் கட்சியை யாருடனும் கூட்டணி சேர விடாமல் தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனா். விஜய்யைத் தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டமாகத் தெரிகிறது என்றாா் அவா்.