ஒரே தொகுதியில் 4 முறை தொடா் வெற்றி!
ஆத்தூா் தொகுதியில் அதிகபட்சமாக தற்போதைய அமைச்சா் இ. பெரியசாமி தொடா்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றிருக்கிறாா்.
அமைச்சர் இ. பெரியசாமி
கோப்புப் படம்
அமைச்சர் இ. பெரியசாமி
கோப்புப் படம்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதி இதுவரை 16 சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக தற்போதைய அமைச்சா் இ. பெரியசாமி ஒரே தொகுதியில் தொடா்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றிருக்கிறாா்.
கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் முறையாக ஆத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா் இ. பெரியசாமி. பின்னா், 1991-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுகவிடம் தொகுதியை இழந்த இவா், 1996-இல் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சரானாா்.
கடந்த 2001 பேரைவத் தோ்தலில் அதிமுக வேட்பாளரிடம் மீண்டும் வெற்றி வாய்ப்பை இழந்தாா். எனினும், இதே தொகுதியிலிருந்து 2006, 2011, 2016, 2021 என தொடா்ச்சியாக 4 முறை பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இ.பெரியசாமி உள்பட 11 போ் போட்டியிட்டனா். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக சாா்பில் அந்தக் கட்சியின் பொருளாளா் திலகபாமா போட்டியிட்டாா். இந்தத் தோ்தலில் 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இ. பெரியசாமி வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும் வைப்புத் தொகையை (டெபாசிட்) இழக்க நேரிட்டது.
இந்த வெற்றியின் மூலம் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா் என்ற சாதனை படைத்தாா் இ. பெரியசாமி.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...