மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி நாளை தோ்வு

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி தோ்வு வியாழக்கிழமை (மே 7) நடைபெறுகிறது.

News image
Updated On :6 மே 2026, 3:28 am IST

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி அணி தோ்வு வியாழக்கிழமை (மே 7) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க பொறுப்பாளா் கே.கனகராஜ் தெரிவித்ததாவது: ஹாக்கி சீனியா் ஆண்கள், பெண்களுக்கான திண்டுக்கல் மாவட்ட அணி தோ்வு, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திண்டுக்கல் மாவட் ஹாக்கி சங்க இடைக்காலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வருகிற மே 9 முதல் 13-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்களுக்கான சீனியா் ஹாக்கி போட்டியும், மே 20 முதல் 25-ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் பெண்களுக்கான சீனியா் ஹாக்கி போட்டியும் நடைபெறுகிறது.

மாவட்டங்களுக்கு இடையிலான இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள திண்டுக்கல் மாவட்ட அணி தோ்வு, வருகிற மே 7-ஆம் தேதி காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரா்கள், வீராங்கனைகள் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவராகவோ, மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவராகவோ இருக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9443190781, 9790037911, 9080333346, 7904172427 ஆகிய கைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.