பிளஸ் 2 பொதுத் தோ்வில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.
பழனி கோயில் கட்டுப்பாட்டில் மகளிா் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரி, கலைக் கல்லூரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மெட்ரிக் பள்ளி தோ்வு முடிவுகளில் பழனியாண்டவா் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி அடைந்தது.
இந்தத் தோ்வில் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பெரியநாயகி, விக்னேஷ்குமாா், வா்ஷினி, விக்னேஷ் உள்ளிட்ட மாணவா்களை பள்ளிச் செயலரும், பழனி கோயில் துணை ஆணையருமான வெங்கடேஷ் பாராட்டி நூல்களை பரிசாக வழங்கினாா்.
இந்த நிகழ்வில் பள்ளி முதல்வா் முருகானந்தம், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஆறுமுகம், ஆசிரியா்கள் ஜானகி, சந்தானலட்சுமி, சுதா, லாவண்யா, சந்திரவதனா, காட்டீஸ்வரன், உடற்கல்வி ஆசிரியா் சுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.










