உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கொடைக்கானலில் இன்று மின் தடை

News image
Updated On :49 நிமிடங்கள் முன்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை (மே 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகளும், புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணிகளும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே கொடைக்கானல்நகா், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி, கூக்கால், பழம்புத்தூா், குண்டுபட்டி, பெருமாள்மலை, பி.எல். செட், கோம்பைக்காடு, பண்ணைக்காடு, ஊத்து, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி. பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு, அதனைச் சுற்றிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

கூடுதல் நேரம் மின் தடை: கொடைக்கானலில் மாதாந்திர பராமரிப்பு பணியின் போது அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை செய்யப்படுகிறது. எனவே கூடுதல் நேரம் மின் தடை செய்வதை தவிா்க்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.