இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தக வெளியீடு குறித்து...

News image

வி.டி. சதீசன் - ENS

Updated On :8 மே 2026, 5:01 pm IST

கேரள முதல்வர் பதவிக்கான போட்டியாளர்களில் ஒருவரான காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் சனிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள மொழியில் எழுதப்பட்ட 'ஆடம் நீ எவிடே ஆகுன்னு' (ஆதாம், நீ எங்கே இருக்கிறாய்) என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம், டிசி புக்ஸ் பதிப்பகத்தால் பதிக்கப்பட்டுள்ளது.

பேச்சுகள் என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த மலையாளப் புத்தகம், 200 பக்கங்களைக் கொண்டது. இதன் விலை ரூ. 252 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிப்பகத்தின் இணையதளத்தில் உள்ள இந்தப் புத்தகச் சுருக்கத்தின்படி, “தனது அரசியல் வாழ்வில் அதிக செல்வாக்கைச் செலுத்திய ஒரு நூல் விவிலியம் (பைபிள்) என்று சதீசன் விவரித்துள்ளார்.

அந்த செல்வாக்கைப் பிரதிபலிக்கும் வகையில், 'ஆடம் நீ எவிடே ஆகுன்னு' என்ற புத்தகத்தில் அவர் ஆற்றிய 32 உரைகள் இடம்பெற்றுள்ளன. இது பல்வேறு கிறிஸ்தவ சமூகங்களுக்கு அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளத்தின் அடுத்த முதல்வராக கே.சி. வேணுகோபாலைத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been announced that a book authored by Congress leader V.D. Satheesan one of the contenders for the post of Kerala Chief Minister will be released on Saturday (May 9).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.